வயிற்றுக்குள் தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற நபர் கைது

வயிற்றுக்குள் தங்க பிஸ்கட்களை வைத்து கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேற்கு வங்க மாநிலம் பர்கானாவில் 54 லட்சம் மதிப்புள்ள 932 கிராம் தங்கம் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். மடை மண்டல் என்ற இளைஞர் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினார்.

சந்தேகத்திற்கிடமான நிலையில் அந்த இளைஞரைப் பார்த்த பிஎஸ்எஃப் வீரர்கள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி உடல் சோதனை நடத்தினர். உடல் சோதனையின் போது, ​​மெட்டல் டிடெக்டர் மூலம் அந்த இளைஞனின் உடலுக்குள் தங்கம் இருப்பதை உணர்ந்த அதிகாரிகள், உடனடியாக அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனைக்குப் பிறகு அந்த இளைஞனின் வயிற்றுக்குள் தங்கம் இருப்பதை மருத்துவர் உறுதி செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *