
‘ரஞ்சிதமே’ பாடலுக்காக நடிகர் விஜய் தனது ஸ்டெப் பயிற்சி செய்யும் BTS வீடியோ வெளியானது
ஜனவரி 11 ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான விஜய்யின் ‘வாரிசு ‘ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் குடும்பக் கதை. எஸ் தமன் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. ‘ரஞ்சிதமே’ படத்தின் முதல் சிங்கிள் வெளியான பிறகு இந்த பாடல் மிகவும் பிரபலமானது, இப்போது அந்த பாடலுக்கான நடன அசைவுகளை நடிகர் பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ரஞ்சிதமே’ பாடலின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டது.
https://twitter.com/i/status/1620694580130873346