பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு அழைக்கும் ஜோபைடன்

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு அதிபர் ஜோ பிடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருக்கும் நேரத்தில் பிடனின் இந்த அழைப்பு வந்துள்ளது.

ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்ற நேரத்தில் வெள்ளை மாளிகையின் இந்த அழைப்பு வந்தது. இந்த ஆண்டு ஜி-20 தொடர்பான பல நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை இந்தியா நடத்தவுள்ளது.ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற தலைப்பில் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *