
துபாய் குடியிருப்பாளர்களுக்கு இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி
துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வீட்டு வாடகையை டெபிட் கார்டு மூலம் நேரடியாக செலுத்தலாம் என்று துபாய் நிலத் துறை சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சென்ட்ரல் பேங்க் டைரக்ட் டெபிட் சிஸ்டம் (யுஏஇடிடிஎஸ்) துபாயில் வசிப்பவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகளில் இருந்து ஒப்பந்தப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட வீடு வாடகைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களில் தானாகப் பணம் செலுத்த அனுமதிக்கிறது என்று துபாய் நிலத் துறை தெரிவித்துள்ளது. குத்தகைதாரர்கள் குத்தகை ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் அல்லது புதுப்பிக்கும் நேரத்தில் இந்த வசதியை இயற்றி கொள்ளலாம்.