
துபாயில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வெளிநாடுகளிலும் புதுப்பிக்க முடியும் என அறிவிப்பு
இனிமேல் வெளியூர்களுக்குச் சென்று தாமதமாகத் திரும்புபவர்கள் வாகனப் பதிவு (முல்கியா) காலாவதியாகிவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வெளிநாடுகளிலும் புதுப்பிக்கலாம். காலாவதியாகும் தேதிக்கு 150 நாட்களுக்கு முன்பு பதிவை புதுப்பிக்கவும் முடியும். வாகனம் வெளிநாடு சென்று சரியான நேரத்தில் திரும்ப முடியவில்லை என்றால், அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் தேர்ச்சி/தேர்வு (வாகனத்தின் தொழில்நுட்ப செயல்திறன் சோதனை) நடத்தி, அறிக்கையை சான்றளித்து இணையதளத்தில் பதிவேற்றுவதன் மூலம் வாகனப் பதிவை ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளகலாம். மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமிருந்து வாங்கப்பட்ட புதிய வாகனங்கள் புதுப்பிப்பதற்கு முதல் 3 ஆண்டுகளுக்கு தொழில்நுட்ப ஆய்வு தேவையில்லை. இதில் வாகன உரிமை காலாவதியானால், மீண்டும் பதிவு செய்வது கட்டாயம். பதிவு காலம் முடிந்தால், இலகுரக வாகனங்களுக்கு 25 திர்ஹம், கனரக வாகனங்களுக்கு 50 திர்ஹம், மோட்டார் சைக்கிள்களுக்கு 12 திர்ஹம் என ஒவ்வொரு மாதமும் அபராதம் வசூலிக்கப்படும்.