
சந்தீப் கிஷன்- விஜய் சேதுபதி நடித்த மைக்கேல் திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் ரிலீசாகிறது
சந்தீப் கிஷன் நடித்துள்ள மைக்கேல் படம் இன்று திரைக்கு வருகிறது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படம் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் மைக்கேல் விஜய் சேதுபதி, அனசுயா பரத்வாஜ், வரலக்ஷ்மி சரத்குமார், வருண் சந்தேஷ் மற்றும் திவ்யன்ஷா கௌசிக் ஆகியோர் நடித்துள்ளனர். கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி போன்றவற்றின் கீழ் பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் கிரண் கௌஷிக் மற்றும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஆகியோரும் உள்ளனர். இந்த படத்தின் வசனங்களை திரிபுரநேனி கல்யாண் சக்ரவர்த்தி, ராஜன் ராதாமணலன் மற்றும் ரஞ்சித் ஜெயக்கொடி எழுதியுள்ளனர். தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் மைக்கேல் வெளியாகிறது .