கொடைக்கானலில் நள்ளிரவில் தெரிந்தது பச்சைவால் நட்சத்திரம்…!!!

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காணப்படும் பச்சை நிற வால் நட்சத்திரம், சூரியனை கடந்து ஜனவரி 12-ம் தேதி பூமியை நோக்கி வந்தது.நேற்று காலை பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை எதிர்பார்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கேமராவுடன் காத்திருந்தனர். இதனை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள வானியல் ஆய்வு மையத்தில் டெலஸ்கோப் மூலம் புகைப்படம் எடுக்க தயாராகி வந்தனர். அடர்ந்த மேக மூட்டம் காரணமாக அவர்களால் படம் எடுக்க முடியவில்லை. இந்நிலையில், நள்ளிரவு 12.30 மணி முதல் கொடைக்கானல் நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் பச்சை நிற வால் நட்சத்திரம் வானில் தென்பட்டது. இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேமராவில் படம் பிடித்தனர். இந்த பச்சை நிற வால் நட்சத்திரத்தை அடுத்த 4 மாதங்களுக்கு வெவ்வேறு காலநிலையில் இரவில் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *