
கிறிஸ்டோபர் திரைப்படம் U/A சான்றிதழுடன் பிப்ரவரி 9 ல் வெளியாகிறது
மெகா ஸ்டார் மம்முட்டியை கதாநாயகனாக வைத்து பி.உன்னிகிருஷ்ணன் இயக்கி திரையரங்குகளில் ரிலீசுக்கு தயாராகி வரும் சமீபத்திய படமான கிறிஸ்டோபர் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளது. கிறிஸ்டோபர் U/A சான்றிதழுடன் பிப்ரவரி 9 அன்று வெளியாகிறது . ‘ஒரு விஜிலன்ட் காவலரின் வாழ்க்கை வரலாறு’ என்ற டேக் லைனுடன் வரும் கிறிஸ்டோபரை ஆர்டி இல்லுமினேஷன்ஸ் எல்எல்பி தயாரித்துள்ளது. த்ரில்லர் ஜானரில் தயாரான இப்படத்தின் திரைக்கதையை உதயகிருஷ்ணா தயார் செய்து வருகிறார். இந்த படத்தில் அமலா பால் தவிர சினேகா, ஐஸ்வர்யா லட்சுமி என மூன்று ஹீரோயின்கள். இப்படத்தில் தென்னிந்திய நடிகர் வினய் ராயும் பிரதான வேடத்தில் நடிக்கிறார்.