
காஞ்சீபுரம் வினை தீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகம் விநாயகர் கோயிலில் அமைந்துள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நோய் நீங்க இங்குள்ள விநாயகப் பெருமானை வழிபடுகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு பின், கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் முத்துரத்தினவேலு, தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கல்பனா, அறநிலையத் துறை செயற்பொறியாளர் லால்பகதூர், காஞ்சிபுரம் அறநிலையத் துறை ஆய்வாளர் பிரித்திகா, கோயில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், பூவழகி, வேலரசு, சுரேஷ், மேலாளர்கள் சுரேஷ், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். .