
உலக அமைதிக்காக கிருஷ்ணகுரு ஏகம் அகண்ட கீர்த்தனையில் பிரதமர் பங்கேற்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 3, 2023) மாலை 4:30 மணிக்கு அசாமில் உள்ள கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தில் நடைபெறும் உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏகம் அகண்ட கீர்த்தனையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கிறார்.
கிருஷ்ணகுரு சேவாஷ்ரம பக்தர்களிடமும் பிரதமர் உரையாற்றுகிறார். பரங்குரு கிருஷ்ணகுரு ஈஸ்வர் 1974 ஆம் ஆண்டு அசாமில் உள்ள பார்பெட்டாவில் உள்ள நசத்ரா கிராமத்தில் கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தை நிறுவினார். இவர் மகா வைஷ்ணவ துறவியான ஸ்ரீ சங்கர்தேவாவின் சீடராக இருந்த மகாவைஷ்ணப் மனோகர்தேவாவின் ஒன்பதாவது வழித்தோன்றல் ஆவார்.
உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏகம் அகண்ட கீர்த்தனை ஜனவரி 6 முதல் கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தில் ஒரு மாத கால கீர்த்தனை.