
உயர்கல்வி நிறுவனங்களில் மூன்று அறிவுசார் சிறப்பு மையங்கள் கட்டமைக்கப்படும் என அறிவிப்பு
புதுடில்லி: செயற்கை நுண்ணறிவை இந்தியாவுக்காக உருவாக்கவும்’ என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், சிறந்த கல்வி நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று சிறப்பு மையங்களை அமைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முன்மொழிந்துள்ளார்.
விவசாயம், சுகாதாரம் மற்றும் நிலையான நகரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி நடத்தவும், அதிநவீன பயன்பாடுகளை உருவாக்கவும், சிக்கல்களுக்கு தீர்வு காணவும், அதன் மூலம் பயனுள்ள AI சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், தரமான மனித வளத்தை வளர்ப்பதற்கும் முன்னணி தொழில்துறையினர் பங்குதாரர்களாக இருப்பார்கள் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.