
அதானி குழும விவகாரத்தால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியதையடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பங்குச் சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், அதானி குழும விவகாரம் மற்றும் அதானி குழுமத்தின் மீது ஹிண்டர்பெர்க் நிறுவனம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கூச்சல், குழப்பம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.