
“ரொனால்டோ மீண்டும் ஐரோப்பாவில் விளையாடுவார்!” – அல் நாசர் பயிற்சியாளர்
கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு மீண்டும் ஐரோப்பாவில் விளையாடுவார் என்று அல் நாசர் அணியின் பயிற்சியாளர் ரூடி கார்சியா தெரிவித்துள்ளார்.
“ரொனால்டோ அணியில் இணைந்தது எங்களுக்கு கூடுதல் பலம். அவர் எதிரணியின் தற்காப்பு ஆட்டத்தை தடுமாறச் செய்கிறார். சிறந்த வீரர்களில் ஒருவர். அல் நாசருடன் அவரது ஆட்டம் முடிவடையாது. அவர் ஐரோப்பாவுக்கு திரும்புவார்,” என்று அவர் கூறினார்.
ரொனால்டோ சமீபத்தில் எதிர்பாராதவிதமாக சவுதி அரேபியாவின் அல் நாசர் குழுமத்தில் இணைந்தார்.