
மெஹந்தி நிகழ்ச்சிக்கு அதியா ஷெட்டி அணிந்து வந்த அவரது பாட்டியின் காதணிகள்
பாலிவுட் சினிமா நடிகை அதியா ஷெட்டிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. அதியாவின் தந்தையும் நடிகருமான சுனில் ஷெட்டிக்கு சொந்தமான கண்டாலாவின் பண்ணை வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் அழகான புகைப்படங்களை அதியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனிடையே , மெஹந்தி விழா புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மெஹந்தி கொண்டாட்டங்களுக்காக அதியா 39,000 ஸ்வரோவ்ஸ்கி படிகங்களால் அலங்கரிக்கப்பட்ட சிக்கன்காரி லெஹங்காவை அணிந்திருந்தார். வெள்ளை நிற ஜார்ஜெட் லெஹெங்காவில் விலைகூடிய முத்துக்கள் மற்றும் காட்சிகள் பதிக்கப்பட்டிருந்தது. லெஹங்காவுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அதியாவின் மிகப்பெரிய பழங்கால காதணிகள். மெஹந்தி விழாவிற்கு அதியா தனது பாட்டியின் காதணிகளை அணிந்திருந்ததாக அதியாவின் ஒப்பனையாளர் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் .