மெட்ரோ ரயில் பணிக்காக வெட்டிய பள்ளத்தில் லோடு வேன் கவிழ்த்தது…

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த காளசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). லோடு வேன் டிரைவரான இவர், நேற்று காலை போரூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி லோடு வேனில் அரிசி மூட்டைகளுடன் சென்று கொண்டிருந்தார்.

போரூர், அய்யப்பன்தாங்கல் அருகே மெட்ரோ ரயில் பணி நடந்து வரும் நிலையில், அதன் அருகே நிலத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென தடுப்புச்சுவரை உடைத்து 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் மூலம் வேனை மீட்டு ராஜேஷை உயிருடன் மீட்டனர்.

பின்னர் சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *