
மத்திய பட்ஜெட் இந்தியாவை வல்லரசாக மற்றும்… முதல்வர் யோகி…!!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில், 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளதாவது, “இன்று முன்வைக்கப்பட்டுள்ள பட்ஜெட் 2023-24, நாட்டின் செழிப்பு மற்றும் 1.30 கோடி மக்களுக்கு சேவை செய்வதை இலக்காகக் கொண்ட புதிய இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வையாகும்.
தற்போதைய மத்திய பட்ஜெட் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றப் போகிறது. இந்த பட்ஜெட் இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவதில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்கள் சார்ந்த ஒன்றியத்தை நான் வரவேற்கிறேன். சுதந்திரத்தின் போது உருவாக்கப்பட்ட ‘வளர்ந்த இந்தியா’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றும் பட்ஜெட் 2023-24. மத்திய நிதி அமைச்சருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! என்று கூறினார்.