
பெஷாவர் மசூதி தற்கொலை குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேக நபர்கள் கைது
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் திங்கட்கிழமையன்று 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். பாதுகாப்பு சோதனைகளைத் தவிர்ப்பதில் குண்டுதாரிக்கு உள் உதவி இருந்ததற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று அவர்கள் கூறினர். இந்த மசூதி காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக மிகவும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கட்டப்பட்டது.