
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் கல்வி செலவை ஏற்ற மும்பை காவல்துறை
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமிக்கு மும்பை காவல்துறை உயர்கல்விக்காக நிதியுதவி அளித்துள்ளது. குழந்தையின் கல்விப் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக மும்பை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையின் மதன்புரா பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
சிறுமியை வீட்டின் அருகே விட்டுவிட்டு ஓடிய 15 வயது சிறுவனை சில மணி நேரங்களிலேயே போலீசார் பிடித்தனர். இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிறுமி ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, சிறுமியின் 10ம் வகுப்பு வரையிலான கல்விச் செலவை ஏற்க தயாராக உள்ளதாக நாக்பாடா காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து அதிகாரிகளும் 1.11 லட்சம் ரூபாய் வசூல் செய்தனர். இந்தத் தொகை குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த தொகை 10ம் வகுப்பு வரையிலான கல்விக்கு பயன்படுத்தப்படும். குழந்தையின் கல்விக்கு சிறந்த பள்ளியை கண்டுபிடிப்போம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.