
பட்ஜெட்; சாமானியர்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் நனவாக்கும் முயற்சியாக இருக்கும் : பிரதமர் மோடி நம்பிக்கை
சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் நனவாக்கும் முயற்சியாக பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இது உலக நாடுகளின் நம்பிக்கையாக இருக்கும் என்றார்.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் மோடி விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
“எதிர்க்கட்சியில் உள்ள எனது நண்பர்கள் அனைவரும் பட்ஜெட்டை மிகவும் கவனமாக ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பட்ஜெட்டில் அனைவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சி செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் இருவரும் பெண்கள். இது நாட்டின் பெருமைக்குரிய தருணங்கள்” என்றார். மோடி கூறினார்.