
நிரஞ்சன் பூஜாரி ஒடிசாவில் சுகாதாரத் துறையின் பொறுப்பாளராக நியமனம்
ஒடிசாவில் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மரணத்தை தொடர்ந்து அவர் வகித்து வந்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பொறுப்பு நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை ஆளுநர் பேராசிரியர். கணேஷி லால் ஏற்றுக்கொண்டதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐந்தாவது முறையாக பிஜேடி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிரஞ்சன், நாடாளுமன்ற விவகாரத் துறையையும் கவனித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஏஎஸ்ஐ கோபால்தாஸால் சுட்டுக் கொல்லப்பட்டார்.