
நியூசிலாந்துக்கு எதிரான இறுதி டி20 போட்டி… இந்திய அணி பேட்டிங் தேர்வு…!!!
இந்தியாவில் விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் கலந்து கொண்டனர். ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.