
நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்தும் புதிய பட்ஜெட்… பிரதமர் மோடி கருத்து
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் மோடி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அவர்களை மேலும் வலுப்படுத்தும். இல்லத்தரசிகளுக்கு அதிகாரம் அளிக்க சிறப்பு சேமிப்பு திட்டங்கள் தொடங்கப்படும். பசுமை ஆற்றல், பசுமை வளர்ச்சி, பசுமை உள்கட்டமைப்பு மற்றும் பசுமை வேலைகளை மேலும் ஊக்குவிக்கும் நிலையான எதிர்காலத்திற்கான பட்ஜெட். பட்ஜெட்டில் தொழில்நுட்பம், புதிய பொருளாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி விகிதங்களை குறைத்து நிவாரணம் வழங்கியுள்ளோம் என்றார்.