
தொடரை வெல்வது யார்? இந்தியா – நியூசிலாந்து இறுதி டி20 போட்டி இன்று தொடக்கம்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தை நிலையில், அடுத்து தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையும் பெற்றது. ஆனாலும் 2-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனது.
இதனிடையே வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் இறுதிப்போட்டி அகமதாபத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, டி20 தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.