
தன்னுடைய இறுதியாண்டு வகுப்பறை … சட்டக் கல்லூரி நினைவுகளை வெளிப்படுத்திய மெகா ஸ்டார் மம்முட்டி
மலையாள மெகாஸ்டார் மம்முட்டி நடிகராக இல்லாமல் இருந்திருந்தால் வழக்கறிஞர் ஆகியிருக்கக்கூடும் . எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி முடித்த மம்முட்டி இரண்டு வருடங்கள் வழக்கறிஞராக பணிபுரிந்தார் . அதன் பின்னர் அனுபவங்கள் பாளிச்சகள் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிகர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். மம்முட்டி தனது கல்லூரி தொடர்பான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் சட்டக் கல்லூரியில் படித்த வகுப்பறையில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டது. “இது என்னுடைய இறுதியாண்டு வகுப்பறை. இங்குதான் சிறு சிறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினோம். இது ஒரு காலத்தில் கொச்சி மாநிலத்தின் சட்டசபை மண்டபமாக இருந்தது” என்று வீடியோவில் மம்முட்டி பேசுகிறார். வகுப்பறையின் காட்சிகளையும் வீடியோவில் காணலாம். வீடியோவின் கீழே மம்முட்டி ‘அல்மா மேட்டர்’ என்று குறிப்பிட்டுள்ளார் .