
சௌபின் ஷாஹிர் நடித்த ‘ரோமான்சம் ‘ படத்தின் டிரைலர் வெளியாகியது
மலையாளத்தில் அறிமுக இயக்குனர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியுள்ள சௌபின் ஷாஹிரின் ‘ரோமான்சம்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் 2007ல் பெங்களூருவில் படிக்கும் நண்பர்கள் குழுவின் கதையைச் சொல்கிறது. டிரெய்லரில் சௌபின் ஷாஹிர் ஓஜோ போர்டின் முன் ஆன்மாவை அழைப்பதைக் காணலாம். இப்படம் கடந்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு வெளியாக இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. புதிய ரிலீஸ் தேதி பிப்ரவரி 3. ஜான் பால் ஜார்ஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் கப்பி சினிமாஸ் ஆகியவற்றின் கீழ் ஜான் பால் ஜார்ஜ், கிரிஷ் கங்காதரன் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். அன்னம் ஜான் பால் மற்றும் சுஷின் ஷ்யாம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்கள் ஆவர் .