கொல்கத்தாவில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து : 2 பேர் பலி

கொல்கத்தா: மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் மலாடா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 39 பேர் காயமடைந்தனர்.

மலாடாவில் உள்ள பாண்ட்வா தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என முதற்கட்டக் கணிப்பு. சிகிச்சையில் உள்ளவர்களை கொல்கத்தா மேயர் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *