
‘கொரோனா ஜவான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது
கொரோனா ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சிசி இயக்கிய புதிய படம் கொரோனா ஜவான். இப்படத்தை ஜேம்ஸ் அண்ட் ஜெரோம் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஜேம்ஸ் மற்றும் ஜெரோம் தயாரித்துள்ளனர். சுஜய் மோகன்ராஜ் எழுதியுள்ள இந்தப் படம் முழு நீள காமெடி என்டர்டெய்னராக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் லுக்மான், ஸ்ரீநாத் பாசி, ஜானி ஆண்டனி, சரத் சபா, இர்ஷாத் அலி, பிட்டோ, ஸ்ருதி ஜெயன், சீமா ஜி நாயர், உன்னி நாயர், சினோஜ் அங்கமாலி, தர்மஜன் போல்காட்டி, விஜிலேஷ், அனிஷ் கோபால், சுனில் சுகதா, சிவாஜி குருவாயூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.