
காஞ்சிபுரம் வாலிபரை தாக்கிய 3 பேர் கைது…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெரிய செங்கலு நீரோடை சாலையில் உள்ள தர்கா அருகே குடிபோதையில் வாலிபர் உள்பட 3 பேர் போதையில் இருந்த கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கை கை, கால், கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
இதில் கார்த்திக் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை தாக்கியவர்கள் தேரடி தெருவை சேர்ந்த யாசர் (21), அவரது நண்பர் விக்ரம் (20), 17 வயது சிறுவன் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து யாசர் மற்றும் அவரது நண்பர் விக்ரம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
17 வயது சிறுவனும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.