கல்விக்கான பட்ஜெட் வருத்தமளிக்கிறது… டெல்லி முதல்வர் சாடல்

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ரூ.1.75 லட்சம் கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தியிருந்தாலும், 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் டெல்லிக்கு ரூ.325 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியை மாற்றாந்தந்தை மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது என்று குற்றம் சாட்டிய அவர், பணவீக்கம் மற்றும் வேலையின்மை பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் தீர்வு காணவில்லை என்றார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்துக்கு நிவாரணம் இல்லை. மாறாக இந்த பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உறுதியான திட்டம் எதுவும் இல்லை. கல்விக்கான பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. 2.64 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உள்ளது.சுகாதார பட்ஜெட்டை 2.2 சதவீதத்தில் இருந்து 1.98 சதவீதமாக குறைத்திருப்பது தீங்கானது.‘‘டெல்லி மக்களிடம் மத்திய அரசு மீண்டும் மாற்றாந்தாய் போல் நடந்து கொண்டுள்ளது. டெல்லி மக்கள் கடந்த ஆண்டு ரூ.1.75 லட்சம் கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தியுள்ளனர். அதில் டெல்லியின் வளர்ச்சிக்கு ரூ.325 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது டெல்லி மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *