
கன்னியாகுமரியில் திங்கட்கிழமை சந்தை அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை…
கன்னியாகுமரி: திங்கட்கிழமை சந்தை அருகே நெல்லியார்கோணம் புதுகாடுவெட்டிவிளையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 63) கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் சரியாக வேலைக்குச் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் ஜெயராம் (29) இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.