
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது கூட்டத் தொடரின் தலைவர் சபா கொரோசி, பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (பிஜிஏ) 77வது கூட்டத் தொடரின் தலைவர் சபா கொரோசி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சந்திப்பின் போது, சபா கொரோசி, நீர்வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சமூகங்களுக்கான இந்தியாவின் மாற்றும் முயற்சிகளை பாராட்டினார். நாகரீக பன்மைத்துவத்தை நோக்கிய இந்தியாவின் முயற்சிகளை ஒப்புக்கொண்ட சபா கொரோசி, உலகளாவிய நிறுவனங்களை சீர்திருத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா முன்னணியில் இருப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
பிரதமர் பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு தனது முதல் இருதரப்பு விஜயத்திற்கு சபா கோரோசிக்கு நன்றி தெரிவித்தார். உலகளாவிய பிரச்சனைகளை தீர்ப்பதில் சபா கொரோசியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறையை அவர் பாராட்டினார். ஐநா 2023 நீர் மாநாடு உட்பட 77வது ஐநா பொதுச் சபையின் தலைவராக சபா கொரோசிக்கு இந்தியாவின் முழு ஆதரவை அவர் உறுதியளித்தார்.
சமகால புவிசார் அரசியல் யதார்த்தங்களை சரியாக பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உட்பட பலதரப்பு அமைப்பை சீர்திருத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.