
ஏழைகளுக்கு ஆதரவான பட்ஜெட்டை எப்படி தயாரிப்பது என்று காட்டுவேன்: மம்தா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை 2023-24 மத்திய பட்ஜெட்டை “சந்தர்ப்பவாதமானது” என்று விமர்சித்தார். “இன்றைய பட்ஜெட் ஏழை மக்களுக்கு எதிரானது. மக்கள் விரோதமானது. அதனால்தான் இந்த பட்ஜெட்டை நான் கண்டிக்கிறேன்” என்று கூறினார். “இந்த பட்ஜெட்டில் எந்த நம்பிக்கையும் இல்லை. எனக்கு அரை மணி நேரம் கொடுங்கள், ஏழைகளுக்கான சரியான பட்ஜெட்டை எப்படி தயாரிப்பது என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.