
இந்திய மக்கள் உற்றுநோக்கும் யூனியன் பட்ஜெட் 2023
2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.இது இரண்டாவது மோடி அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். தேர்தல் ஆண்டு என்பதால், பட்ஜெட்டில் பிரபலமான திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
வருமான வரிச்சலுகையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் உற்று நோக்குகின்றனர். நடுத்தர மக்களுக்கு வருமான வரி, வீட்டுக்கடன் வட்டி சலுகை போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐந்தாவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.