
ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டிணம் அறிவிப்பு
ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் ஆந்திர முதல்வரின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிய தலைநகராக அமையவுள்ள விசாகப்பட்டினத்திற்கு அனைவரையும் அழைப்பதாகவும், தானும் விசாகப்பட்டினத்திற்கு செல்லவிருப்பதாகவும் அவர் டெல்லியில் தெரிவித்தார்.
கவர்னர் தலைமையகமும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும். இதற்கிடையில், சட்டமன்றத்தின் செயல்பாடு தற்போதைய தலைநகரான அமராவதியில் இருக்கும். மேலும் உயர்நீதிமன்றம் கர்னூலுக்கு மாற்றப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.