
இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பு…
பெங்களூர்: பெங்களூரு அருகே 5 நாட்கள் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. எலஹங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு வான் கண்காட்சி நடைபெறும். இதன்காரணமாக ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை அப்பகுதியில் இருந்து 10 கி.மீ., பகுதிக்குள் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மீன், கோழி உள்ளிட்ட இறைச்சி விற்பனை செய்யும் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது விமானப்படை விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.