
முக்கிய விவகாரத்தில் பிரேசில்-அர்ஜென்டினாவின் செயற்பாடுகளை வெனிசுலா ஆதரிக்கிறது
தற்போது பொதுவான நாணயத்திற்கான பிரேசில்-அர்ஜென்டினா செயற்பாடுகளை வெனிசுலா ஆதரிக்கிறது . பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மற்றும் அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஆகியோர் தென் அமெரிக்க நாடுகளுக்கு பொது நாணயம் என்ற யோசனையை முன்மொழிந்தனர். இந்த யோசனையை நடைமுறைப்படுத்தவும், லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்தார் . லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு பொதுவான நாணயம் என்ற எண்ணம் அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளை வலிமையாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .