
நடிகை ராஷ்மிகா தூங்கி வழியும் வீடியோவை பார்த்து ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா விஜய்தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த இருவரும், மாலித்தீவுக்கு டேட்டிங் சென்றாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இணையத்தில் பரவி வரும் வதந்தி குறித்து இருவரும் வாய் திறக்காமல் மௌனமாக சாதித்து வருகின்றனர் . தங்களை பற்றி என்னத்தான் வதந்தி பரவினாலும் அதைப்பற்றி இருவரும் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தானா தூங்கி வழியும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ வாரிசு படப்பிடிப்பு தளத்தில் ஷூட்டிங்கிற்காக மேக்கப் மேன் ஹேர் ஸ்டைல் செய்துவிடுகிறார். இதில் , ராஷ்மிகாவோ குறட்டை விடும் அளவுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். இந்த வீடியோவைபார்த்த நெட்டிசன்கள் மாலத்தீவில் மட்டும் தான் ஆட்டம்போடுவீங்களா? என பங்கம் செய்து வருகின்றனர்.