சியான் விக்ரமின் தங்கலான் ….. படக்குழு விரைவில் கேஜிஎப்க்கு செல்லவிருக்கிறது

தமிழ் சினிமாவில் சியான் விக்ரமின் கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் கடந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. பீரியட் படமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடிக்கிறாரா . இந்த படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் உள்ளிட்டவர்களின் நடிப்பில் ஏகப்பட்ட காட்சிகளை சென்னையில் எடுத்து முடித்துள்ளார் பா ரஞ்சித். இதை தொடர்ந்து தற்போது சென்னையில் மாளவிகாவின் போர்ஷன்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இடையில் சிறிது இடைவெளி எடுக்கவுள்ள படக்குழு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக கேஜிஎப் செல்லவிருக்கிறது . இங்கு விக்ரம் மற்றும் பசுபதி நடிக்கவிருக்கும் காட்சிகளை எடுக்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் மொத்த சூட்டிங்கையும் வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க பா ரஞ்சித் திட்டமிட்டு, அதற்கேற்ப படத்தின் சூட்டிங்கை விரைவுப்படுத்தி கொண்டுள்ளார். கேஜிஎப் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அடிப்படையாக கொண்டு வித்தியாசமான திரைக்கதையுடன் இந்தப் படம் ரசிகர்களை சந்திக்க போகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *