
குரான் எரிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்த எகிப்திய அமைப்பு
கடந்த தினங்களில் இரண்டு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் இஸ்லாத்தின் புனித நூலை இழிவுபடுத்தியதையடுத்து, எகிப்தின் முக்கிய மத அமைப்பு புதன்கிழமை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஸ்வீடிஷ் மற்றும் டச்சு தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது. சன்னி முஸ்லீம் உலகின் முன்னணி மத நிறுவனமான எகிப்தின் அல்-அஸ்ஹரின் அழைப்பு, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக முஸ்லீம் உலகில் இருந்து தொடர்ச்சியான செயற்பாடுகளில் சமீபத்திய பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது . ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியே டேனிஷ் இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் ராஸ்மஸ் பலுடன் சனிக்கிழமை குரானை எரித்தார். ஞாயிற்றுக்கிழமை, தீவிர வலதுசாரி பெகிடா இயக்கத்தின் டச்சுத் தலைவர் எட்வின் வேகன்ஸ்வெல்ட், ஹேக்கில் உள்ள டச்சு பாராளுமன்றத்திற்கு அருகில் குரானின் பக்கங்களைக் கிழித்து மிதித்தார். இதைத்தொடர்ந்து பெரும் அதிர்வலைகள் உருவெடுத்திருந்தன.