
இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலஸ்தீன இளைஞர்
வடக்கு ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் பாலஸ்தீனியர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜெனின் அகதி முகாமைச் சேர்ந்த அரஃப் அப்தெல் நாசர் லஹ்லூஹ் (20) என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கெடுமிமின் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றத்திற்கு அருகிலுள்ள கல்கிலியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்தெல் நாசர் கத்தியால் குத்தி கொல்ல முயன்றதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியது. இதற்கிடையில், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷுபாட் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொரு பாலஸ்தீனியர் படுகாயமடைந்தார்.