
74வது குடியரசு தினம்… பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு…!!!
இந்தியாவின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளதால் பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மறைந்த உத்தரபிரதேச முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 106 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு பத்ம விபூஷன், ஒன்பது பத்ம பூஷன் மற்றும் 91 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும்.