
ஸ்டைலான லுக்கில் நிவின் பாலி … துபாயில் லொகேஷன் படப்பிடிப்பில் இணைந்ததாக தகவல்
மலையாள சினிமாவில் திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், தனது கேரியரை அணுகுவதிலும் தனக்கென பிரத்தியேக வழியைப் பின்பற்றும் நடிகர் நிவின் பாலி. நிவின் சமீபத்தில் தனது உடல் எடையை குறைப்பதற்காக மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் செட்டில் இணைந்துள்ளார். ஹனிப் அதேனி இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் துபாய் லொகேஷன் இணைந்துள்ளார் நிவின். 2019 ம் ஆண்டு வெளியான மைக்கேலுக்குப் பிறகு நிவின் பாலி மற்றும் ஹனிப் அடேனி இணையும் படம் இதுவாகும் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கியது. இப்போது வெளிவந்துள்ள லொகேஷன் படங்களில் நிவின் பாலி ஸ்டைலான லுக்கில் தோன்றியுள்ளார். நிவினின் 42வது படத்தை மேஜிக் பிரேம்ஸ் மற்றும் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் நிவின் பாலி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் நிவின் பாலியுடன் ஜாபர் இடுக்கி, வினய் கோட்டை, விஜிலேஷ், மமிதா பைஜு, அர்ஷா சாந்தினி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு விஷ்ணு தாண்டசேரி ஒளிப்பதிவு செய்கிறார்.