
வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாக நீங்கள் இருப்பீர்கள்… பிரதமர் மோடி உரை
நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. குடியரசு தின விழாவில் பங்கேற்கும் என்சிசி மாணவர்கள் மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். இளைஞர்களுடன் உரையாடல் என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இந்த உரையாடல் நிகழ்ச்சி 2 காரணங்களுக்காக எனக்கு சிறப்பு வாய்ந்தது. இளைஞர்களிடம் ஆற்றல், ஆர்வம், உற்சாகம் மற்றும் புதுமை உள்ளது. “உங்கள் நேர்மறையான அணுகுமுறை என்னை இரவும் பகலும் வேலை செய்ய தூண்டுகிறது,” என்று அவர் கூறினார். இந்த சுதந்திர சகாப்தத்தில் நீங்கள் அனைவரும் நாட்டின் அபிலாஷைகளையும் கனவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்று அவர் தனது 2வது காரணத்தில் கூறினார். பிரதமர் மோடி தொடர்ந்து பேசுகையில், இன்றைய இளைஞர்களாகிய நீங்கள், வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாக இருக்கப் போகிறீர்கள். இதை கட்டுவதற்கு நீங்கள் மிகப்பெரிய பொறுப்பாளியாக இருப்பீர்கள் என்றார்.