பிப்ரவரி 1ம் தேதி தொடங்கும் ‘இயற்கை மற்றும் பறவை திருவிழா’…!!!

விஜயசாகர் பறவைகள் சரணாலயம் உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ளது. உத்தரபிரதேச மாநில அரசின் வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் 7வது ‘இயற்கை மற்றும் பறவை திருவிழா’ இங்கு நடைபெற உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள், பறவையியல் வல்லுநர்கள், நிபுணர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் இவ்விழாவின் போது வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *