உக்ரைன் போல்செவிக் உருசியாவிடம் இருந்து விடுதலை அறிவித்த நாள் ஜனவரி 25

1881 – தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

1882 – வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் அரசு முறைப் பயணமாக கொழும்பு வந்தனர்.

1890 – நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.

1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25  மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.

1918 – உக்ரைன் போல்செவிக் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1924 – முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் சாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *