
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்… அரையிறுதிக்குள் நுழைந்த ஜோகோவிச்…!!!
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் கடந்த 16ம் தேதி தொடங்கி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ரஷ்ய வீரர் ஆன்ட்ரி ரூப்லேவை சந்தித்தார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச்சின் 10வது ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி ஆட்டம் இதுவாகும். ஜோகோவிச் வரும் 27ம் தேதி அரையிறுதியில் அமெரிக்க வீரரான டாமி பாலை சந்திக்கிறார்.