
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் லினா ரிபாகினா
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, லாத்வியாவின் ஜெலேனா ஒஸ்டாபென்கோவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒஸ்டாபென்கோவை வீழ்த்தி எலினா ரிபாகினா அரையிறுதிக்குள் நுழைந்தார்.