லக்னோவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

லக்னோவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்திற்குள் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹஸ்ரத்கஞ்சில் உள்ள அலயா அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டிடத்தில் 4 குடும்பத்தினர் வசித்து வந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 3 பேர் மீட்கப்பட்டனர். நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *