
அந்தமானில் உள்ள 21 தீவுகளின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்
அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு பரமவீரச்சக்ரா வெற்றியாளர்களின் பெயரை பிரதமர் மோடி சூட்டியுள்ளார். ‘பராக்ரம் திவாஸ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தீவுகளுக்கு பெயரிடப்பட்டது. சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்தநாளை முன்னிட்டு, முன்பு ரோஸ் தீவு என்று அழைக்கப்பட்ட தீவுக்கு தற்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்று பெயர் மாற்றப்பட்டள்ளது. இந்த தீவில் சுபாஷ் சந்திரபோஸ் நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார். விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்றார்.
விழாவில் பேசிய பிரதமர், சுதந்திரத்திற்குப் பிறகு மறக்கப்பட முயன்ற நேதாஜி ஒவ்வொரு நொடியும் நினைவுகூரப்படுவதை 21ஆம் நூற்றாண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார். தீவுகளுக்கு பரமவீர சக்ரா வெற்றியாளர்களின் பெயரை சூட்டுவதற்கு பிரதமர் முன்முயற்சி எடுத்துள்ள நிலையில், அவை என்றென்றும் நினைவில் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.