
சொந்த மண்ணில் சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 45 சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்கள் (9 சதம்) அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார்.
சச்சின் 8 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். இன்றைய சதத்தின் மூலம் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த சச்சின் சாதனையை இவர் சமன் (20 சதங்கள்) செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
விராட் கோலி இன்னும் 5 சதங்கள் எடுத்தால் ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.